Posts

Showing posts from November, 2008

Tamil kavithaiiiiii..........

"மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்தேன் 'குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே' என்றான் அண்ணன் 'எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே' என்றாள் அக்கா 'சளி பிடிச்சுக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு' என்றார் அப்பா தன் முந்தானையால் என் தலையை துவட்டிக்கொண்டே திட்டினாள் அம்மா என்னையல்ல; மழையை!''